மகேஷ் பாபுவை வைத்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கும் புதிய படம், மூன்றரை மணி நேரம் ஓடும் வகையில் ஒரே பாகமாக வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் ‘ஷுட்டிங் இடைவெளியின்றி நடந்து வருகிறது.
படத்துக்கு ,தற்காலிகமாக ‘SSMB -29-‘என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘ஆந்திராவிலும், ஒடிசா வனப்பகுதியிலும் படப்பிடிப்புமுடிந்துள்ள நிலையில் ,இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆப்பிரிக்க காடுகளில் நடைபெற உள்ளது..
இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலர் மகேஷ் பாபு உடன் நடித்து வருகிறார்கள்.
ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ,
இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட
ராஜமவுலி, முதலில் திட்டமிட்டிருந்தார்.
தற்போது இப்படத்தினை ஒரு பாகமாக மட்டுமே
எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி.
ஆர்.ஆர்.ஆர்,படம் போல், இந்த படமும் மூன்றரை
மணி நேரம் ஓடும் வகையில் தயாராகிறது.
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.முதன் முறையாக படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட 3 நிமிடம் ஓடும் வீடியோ தயாராகி
வருகிறது.
இது ‘பான் வேர்ல்டு’படம் என்பதால். இந்த வீடியோவை ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிட ராஜமவுலி முடிவு
செய்திருக்கிறார்.
2027 ஆம் ஆண்டு படம் ரிலீஸ் ஆகிறது.
—–