மங்களூரில் கொள்ளை அடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகை நெல்லையில் சிக்கியது எப்படி?
ஜனவரி-24.
கர்நாடக மாநிலம் மங்களூரில் வங்கயில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகளில் 18 கிலோ நகைகள் திரு நெல்வேலி அருகே பறிமுதல் செய்யப்ட்டு இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து உள்ளது.
மங்களூரு அருகே கூட்டுறவு வங்கி ஒன்றில் கடந்த 17- ஆம் தேதி நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ரொக்கப் பணத்தையும் ஏராளமான தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டு தப்பினார்கள். பறி போன ரொக்கம் மற்றும் நகைகளின் மதிப்பு 12 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது.
கொள்ளையர்கள் இந்தி மற்றும் கன்னட மொழியில் பேசியதால் அவர்கள் வட இந்தியா அல்லது கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. விசாரணை மேற்கொண்ட மங்களூரு போலீசாருக்கு கொள்ளையர்கள் அங்கிருந்து கேரள மாநிலம் வழியாக திருநெல்வேலி மாவட்டத்திற்குள் புகுந்தது தெரியவநத்து. இதையடுத்து மங்களூரு காவல் துறை ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே முருகாண்டி, ஜோஸ்வா எனற இரண்டு பேரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்து கொண்டு சென்றனர்.
விசாரணையின் போது அம்பாசமுத்திரம் அருகே உள்ள பத்மநேரியில் உள்ள தம்முடைய வீட்டில் நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக முருகாண்டி தெரிவித்தார். உடனே போலீசார் அந்த வீட்டுக்குள் நுழைந்து 18 கிலோ எடையுள்ள தங்க நகைகளை கைப்பற்றி உள்ளனர். கொள்ளையருக்குச் சொந்தமான வேறு சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் பலத்த பாதுகாப்புடன் மங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.
கொள்ளையருக்கு எல்லைகள் இல்லை.
*