வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘அல்டிமேட்ஸ்டார்’அஜித் நடித்து வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணையவில்லை.
அஜித்தும், வெங்கட்பிரபுவும் மீண்டும் இணைந்து படம் பண்ண இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட்பிரபுவிடம், ‘மங்காத்தா 2’ குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த, வெங்கட்பிரபு, “’மங்காத்தா 2’ குறித்து தெரியவில்லை. ஆனால், அந்தப்படத்தின் மீது அனைவருக்கும் ஆசை இருக்கிறது. அதன் 2-ம் பாகம் பண்ணலாமா அல்லது வேறு படம் பண்ணலாமா என்று தெரியவில்லை.
என்னை நம்பிய முதல் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், தல, ஏ.கே மட்டுமே. என்னை நம்பிய முதல் ஹீரோ அவர் தான். அவர் , தனது படத்தின் இயக்குநரை எப்படி தேர்ந்தெடுப்பார் என்பது
எல்லாம் தெரியாது’என்றார்.
—