இருபது ஆண்டுகளாக ஒரு நடிகை கதாநாயகியாக மட்டுமே நடிப்பது ரொம்பவும் அபூர்வம். அந்த வகையில் த்ரிஷா கொடுத்து வைத்தவர்.
20 ஆண்டுகளாக அவர் தமிழில் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். கொஞ்சகாலம் அவரை அதிக படங்களில் பார்க்க முடியவில்லை மணிரத்னம் இயக்கிய பொன்னியின்செல்வன் படத்துக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர மலையாளப்படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.
படத்தின் பெயர் ‘ஐடின்டிட்டி’.
ஃபாரன்சிக் படத்தை இயக்கிய அகில்பாலும், அனாஸ்கானும் இணைந்து இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்கள். டோவின் தாமஸ் கதாநாயகனாக நடிக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் ஐடின்டிட்டி படத்தின் ஷுட்டிங், செப்டம்பர் மாதம் ஆரம்பமாகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் , மடோனா செபாஸ்டியன். திடீரென அவரை மாற்றி விட்டு த்ரிஷாவை ,நாயகியாக்கியுள்ளனர். இதற்கு முன்பு த்ரிஷா’ஹேய் ஜுட்’ என்ற மலையாளப்படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேரளாவுக்கு ஷிப்ட் ஆகியுள்ளார்.
’த்ரிஷாவுடன் கை கோர்ப்பது உற்சாகமானது.மறக்க முடியாத பயணத்துக்கு தயாராகுங்கள்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், டோவினோ தாமஸ்.
000