கோவையில் ஓட்டல் ஒன்றில் செல்வபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் – ஹேமலதா திருமண வரவேற்பு நடைபெற்றது.
உறவினர்கள் , நண்பர்கள் என ஏராளமானவர்கள பரிசளித்து வாழ்த்தினர்.
இதே போன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி உள்ளிட்ட விவசாயிகள் குழுவாக வந்து புதுமண தம்பதிகளை வாழ்த்த வந்திருந்தனர்.
மற்றவர்கள் தங்கம், வெள்ளி அல்லது வேறு வகையான பரிசுகளை, பணத்தை மணமக்களுக்கு தந்து வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.
ஆனால் விவசாய சங்கத்தினர் தக்காளியை தாம்பாலத்தில் வைத்து மணமக்களுக்கு பரிசாக கொடுத்தனர். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
கர்நாடகத்தில் சில தினங்களுக்கு முன்பு பண்ணை ஒன்றில் இருந்து தக்காளியை கொள்ளை அடித்துச் சென்றனர்.
உத்திரபிரதேசத்தில் அடியாட்கள் துணையுடன் கடைகாரர் ஒருவர் தக்காளி விற்றக்காட்சி வைரலானது.
இப்போது தக்காளியை மணமக்களுக்கு பரிசாக கொடுத்து உள்ளனர்.
போகிற போக்கில் தக்காளியை அடகு வைத்துக்கொண்டு பணம் தருமாறு வங்கியில் கேட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
000