ஆகஸ்டு,04-
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் தூங்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் கடிகாரம் போல் இயங்கிக்கொண்டே இருப்பவர்கள்.
இந்தியன் -2 வும், கேம் சேஞ்சரும் தான் ,ஷங்கரின் இப்போதைய மூச்சு.
மணிரத்னம், கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்துக்கான கதையில் மூழ்கி கிடக்கிறார்.
இருவருமே தமிழ் சினிமாவை இந்தியாவை தாண்டி கொண்டு சென்றவர்கள். எந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இயக்குநர்கள் சக டைரக்டர்களுடன் ஒரு பொன்மாலை பொழுதில் , பொழுதை கழித்துள்ளனர்.
கவுதம் வாசுதேவ் மேனன், சசி, முருகதாஸ், லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோருடன் ஒரே இடத்தில் கூடியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படம் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பொன்மாலை பொழுது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி இயக்குனர்கள் ஒன்றாக இணைந்திருக்கும் இந்த நிகழ்வால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த புகைப்படங்கள், லைக்குகளை குவித்து வருகிறது.
000