ஆகஸ்டு, 24-
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.ஒரு இடத்திலும் பாஜக வெல்லவில்லை. அந்த கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே ஜெயித்தார்.
இந்த முறையும் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அண்மையில் நடத்தப்பட்ட சில கருத்து கணிப்புகளில் பாஜக மீண்டும் வெல்லும்- மோடி மூன்றாம் முறையாக பிரதமர் ஆவார் என தெரியவந்துள்ளது.இதனால் தமிழகத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு மத்திய அமைச்சர் ஆகும் ஆசை துளிர் விட்டுள்ளது.
இதனால் அவர்கள் எம்.பி.தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்கள்.கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், நெல்லை எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன்ஆகியோர் தங்கள் விருப்பத்தை டெல்லி மேலிடத்தில் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் பாஜக தலைமை பச்சைக்கொடி காட்டியுள்ளது. நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் ஆசையில் கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியிடம் சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப்போனதால் அவரது அமைச்சர் கனவு நிறைவேறவில்லை.
இந்த முறையாவது கனவு நனவாகுமா?
000