மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்து உள்ள “ஆதனின் பொம்மை”

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஆதனின் பொம்மை” என்ற நாவல் எழுதியதற்காக உதயசங்கருக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960-ம் ஆண்டு பிறந்தவர். நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்து எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி என எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்துள்ளார். கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார். வரலாற்றை இளையோரிடம் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே  ஆதனின் பொம்மையை எழுதியதாகவும் உதய் சங்கர் தெரிவித்து உள்ளர்.

இதே வேளையில் திருக்கார்த்தியல் என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தன்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்வாக உள்ளதாக  தெரிவித்துள்ளார். 2019ல் வெளிவந்த திருக்கார்த்தியல் சிறுகதை இதுவரை 6 விருதுகளை பெற்றுள்ளது. குழந்தை தொழிலாளர்களின் உலகம் உள்ளிட்டவை பற்றி எழுதப்பட்டதற்காக திருக்கார்த்தியல் கதைக்கு விருது கிடைத்து இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த எழுத்தாளர் ராம் தங்கம் ராஜவனம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *