மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவுக் கொண்டால் தண்டனை.. உச்சநீதிமன்றம் விசாரிக்கும் வழக்கு விவரம்.
ஆணாதிக்கம் மனப்பான்மை கொண்டவர்களுக்கு பெண் எப்போதும் தனக்கு கீழ்படிந்தவள் என்ற சிந்தனை உண்டு.
சமைத்துப்போட வேண்டும், துணிகளை துவைத்துத் தரவேண்டும், கால் கைகளை பிடித்து விட வேண்டும் என்ற பழைய சிந்தனையில் உலா வரும் ஆண்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அழைத்தபோது உடலுறவுக்கு உடன் பட வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு உண்டு.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் திருமணம் ஆகியிருந்தாலும் மனைவியின் விருப்பம் இல்லாதபோது உடலுறவுக் கொள்வது சட்டப்படி தவறு என்று தீர்ப்பு அளித்திருந்தது. அப்படி செய்வது பாலியல் பலாத்காரத்திற்கு சமமான குற்றம் என்பதும் கர்நாடக உயர்நீதிமன்றத்தித் கருத்தாகும்.
இதே போன்ற வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருந்தது. மனையின் விருப்பம் இல்லாமல் உடலுறவுக் கொள்வது பாலியல் பலாத்காரத்திற்கு ஒப்பான குற்றம் என்று ஒரு நீதிபதியும் மனைவியின் விருப்பம் இன்றி உடலுறவுக் கொள்வது ஒரு போதும் குற்றம் ஆகாது என்று மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்து இருந்தனர். மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி முன் விசாரணயில் உள்ளது.
இந்த பிரச்சினையில் தெளிவான கருத்து வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் திருமதி இந்திரா ஜெய்சிங், திருமதி நன்டி(Nundy) ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தலைமைீ நீதிபதி சந்திர சூட் அமர்வில் நேற்று முறையிட்டனர்.
அவர் இந்த மனுக்கள் மீதான விசாரணையை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்து விரைவாக விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார்.
மூன்று நீதிபதிகள் அமர்வு அளிக்க இருக்கும் தீர்ப்பு இந்த பிரச்சினையில் ஒரு தெளிவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
000