மன்னனாக மகுடம் சூடினாரா மாரி செல்வராஜ்?… இதோ மாமன்னன் திரைவிமர்சனம்!

ஜூன் -29

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

ரெட் ஜெயி்ட்ஸ் மூவிஸ்  தயாரிக்க ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் கடைசி  படம் மாமன்னன் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. மேலும் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜின் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, இதுவும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு காரணமாக அமைந்தது.

வடிவேலு சேலத்தில் மாமன்னன் என்ற பெயரோடு இரண்டு  முறை எம்எல்ஏவாக உள்ளார், அவர் மகனாக வரும் உதயநிதி ஸ்டாலின் தற்காப்பு கலை பயிற்சி பட்டறை நடத்தி வருகிறார். அதே பகுதியில் கீர்த்தி சுரேஷ் மாணவர்களுக்கு இலவசமாக கோச்சிங் சென்டர் நடத்திக் கொண்டு இருக்கிறார். அவர் தமது சென்டருக்கு வருமானம் குறைவதால் இன்னொரு சென்டரை  அடித்து நொறுக்குகிறார்.

இந்த ஒரு சிறிய பிரச்சனை அந்த மாவட்டத்தில் மிகப்பெரிய அரசியல் பிரச்சினையாக எப்படி உருவாகிறது என்பது தான் மாமன்னன் படத்தின் கதை.

மாரி செல்வராஜ் வழக்கம் போல தன் அரசியலை மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளார். மிகவும் நேர்த்தியான திரைக்கதையின் மூலம் தான் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ஒவ்வொரு காட்சிகளிலும் அரசியல் தெறிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் தனது வழக்கமான நடிப்பை ஓரம் கட்டிவிட்டு இயல்பான அதேசமயம் அதிவீரன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் அப்பா பேச்சை கேட்காமல் கோவப்பட்டும், பிறகு அப்பாவின் ஒவ்வொரு சொல்லிற்கு அடிபணியும் கோபக்கார இளைஞனாக அசத்தியுள்ளார்.

மறுபுறம் வடிவேலு மாமன்னாக வாழ்ந்துள்ளார். ஒவ்வொரு காட்சிகளிலும் தன்னுடைய முக பாவனைகள் மூலமாகவே நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார், மேலும் பல இடங்களில் வசனங்களின் மூலமே கைத்தட்டல்களை பெறுகிறார். இதைவிட ஒரு சிறந்த கதாபாத்திரம் இனி வடிவேலுவிற்கு கிடைப்பது சந்தேகமே. நிச்சயம் தேசிய விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு தேர்ந்த அரசியல் வாதியாக அசத்தி உள்ளார்.

நடிப்பு அரக்கன் பகத் பாசில் இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை தன்னுடைய கண்களின் மூலமே அனைவரையும் கட்டி இழுக்கிறார். படம் பார்ப்பவர்கள் ஒவ்வொரு மனதிலும் கோபம் வரும் அளவிற்கு அசாத்திய நடிப்பை அசால்டாக ஆக வெளிப்படுத்தி உள்ளார்.

கீர்த்தி சுரேஷ்க்கு இதுவரை அவர் நடித்திறாத ஒரு கதாபாத்திரம், அதனை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.

இவர்கள் அனைவரையும் தாண்டி சைலண்டாக சம்பவம் செய்துள்ளார் ஏஆர் ரஹ்மான். பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள நிலையில்  பின்னணி இசையிலும் அசத்தி உள்ளார்.

தனுஷ்  கூறியிருந்தது போல படத்தின் இன்டெர்வல் காட்சி படு மாஸாக இருந்தது. வடிவேலு, உதயநிதி கையில் கத்தி மற்றும் துப்பாக்கியுடன் இருக்கும் அந்த ஒரு காட்சி மொத்த திரையரங்கையே அதிர வைக்கிறது.

படம் முழுக்க வசனங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. ஏழைகள் கோவ படவே தகுதி வேண்டும், யுத்தம்னு வந்துட்டா பகை இருக்க கூடாது போன்ற வசனங்கள் பிரமாதம்.

எம்எல்ஏவாகவே இருந்தாலும் அந்தப் பகுதிகளில் எவ்வளவு சிரமங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை மாமன்னன் படம் உணர்த்துகிறது. பன்னிக்குட்டி, நாயை வைத்து சொல்லப்பட்ட அரசியல் பிரமாதம்.

இரண்டாம் பாதியை விட முதல் பாதி சற்று மெதுவாக நகர்கிறது. இது சிலருக்கு பிடிக்காமல் போகலாம், கதையின் கருவிற்குள் நுழைந்து பின்பு நாமும் அதனுடன் பயணிக்கிறோம். மாமன்னன் – தரம்

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *