டிசம்பர்-26,
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 15 நாள் நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.
போலீஸ் விசாரணையின் போது கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மாணவிக்கு நேரிட்ட பாதிப்பு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் அண்ணா பல்கலை. அருகே அதிமுக சார்பில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் விவகாரத்தைக் கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
*