மாமன்னன் வடிவேலுவின் ஆனந்த கண்ணீர்

ஆகஸ்டு,19-

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த ’மாமன்னன் ‘ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29-
ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையுல் குவித்தது.

மாமன்னன் திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடும் நிலையில் இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வடிவேலுவின் பேச்சுதான் ஹைலைட்.

” இன்று மிக மகிழ்ச்சியான நாள். இந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிவிட்டார், உதயநிதி.நான் எத்தனையோ நகைச்சுவை படம் செய்துள்ளேன். என்வாழ்நாளின் மொத்த படத்திற்கும் இந்த படம் சமமானதாக ஆகிவிட்டது. என்னால் மறக்க முடியாத படம். மாரி செல்வராஜ் கதை சொன்னபோதே அவரிடம் மிகப்பெரிய தெளிவு இருந்தது. 30 படத்திற்கான கதை அவரிடம் இருந்தது. இந்தப் படத்தை கண் இமைக்கமல் பார்க்க வைத்தது ஏ.ஆர் ரகுமான் தான் அவருக்கு நன்றி. இந்த படத்தில் பல காட்சிகள் என்னைத் தூங்கவிடவில்லை, உலுக்கி எடுத்துவிட்டது. ஒவ்வொரு  காட்சியிலும் உயிர் இருந்தது.’’என்று நெகிழ்ந்தார், வடிவேலு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *