மாவீரன் வசூல் 89 கோடி ரூ பாய்,, சிவகார்த்திகேயன் உற்சாகம்.

ஆகஸ்டு,11-

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம், ‘மாவீரன்’.‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கிஉள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஊடகங்களாலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாவீரன் இதுவரை 89 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பட்ஜெட் 35 கோடி ரூபாய்.

மாவீரன் வெற்றியால் அவரது அடுத்த படமான ’அயலான்’படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

சிவகார்த்திகேயன் மார்க்கெட் ஏறியுள்ளதால் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவரை தேடி வருகின்றன. பல ஆண்டுகளாக சினிமா தயாரிக்காமல் இருந்த ஏவிஎம், சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து புதிய படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

மாவீரன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *