ஜனவரி-02.
‘சென்னை நான் பிறந்த நகரம் மட்டுமல்ல; அது என் அடையாளத்தின் ஒரு பகுதி என்று சொல்லி கெய்ட்லின் சாண்ட்ரா நீல் மிகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறார்.
அவர் 19 வயதில் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தை வென்று அனவைரின் கவனத்தையும் பெற்றவர்.
சான்ட்ரீனா நீல் தமது பூர்வீகம் பற்றி பேசுகையில் “சென்னை நான் பிறந்த நகரம் மட்டுமல்ல; இது எனது அடையாளத்தின் அடிப்படை பகுதியாகும். இங்கு இருந்து என்னுடன் எடுத்துச் செல்லும் மிகப்பெரிய விஷயங்களில் நான் சென்னையில் பிறந்தவள் என்பதும்”
நியூ ஜெர்சியில் கடந்த 2023- ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திரப் போட்டியில் கெய்ட்லினுக்கு ‘மிஸ் இந்தியா அமெரிக்கா’ என்ற கிரீடம் கிடைத்தது.
சென்னை வந்துள்ள அவர்“ அமெரிக்காவில் வளர்ந்த நான், இந்தியக் குடியுரிமையை வைத்திருக்கிறேன். வேறு பட்ட இரு கலாச்சாரங்களுக்கு இடையே நான் சிக்கியிருப்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த பட்டத்தை வென்றது இரண்டு கலாச்சாரங்களைக் கொண்டாடுவதுப் போன்றது. என்னைப் போன்ற பல இளம் பெண்கள் அனுபவிக்கும் அழகான சிக்கலைப் பிரதிநிதித்துவம் படுத்தும் செயல் ” என்று அவர் கூறினார்.
*