ஏப்ரல் 19
மீண்டும் அச்சமூட்டும் கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,542 பேருக்கு பாதிப்பு. தமிழகத்தை பொறுத்த வரை ஒரே நாளில் 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,542 புதிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 63,562 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,31,190 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் புதிய தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளன.
காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, டெல்லியில் நான்கு கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. ஹரியானா, கர்நாடகா மற்றும் பஞ்சாபில் இருந்து தலா ஒரு இறப்பு. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,42,42,474 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 302 பேர், பெண்கள்225 பேர் அடங்குவர். அதிகபட்சமாக சென்னையில் 130 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத் துறை வழங்கிய தகவல்களின்படி, செவ்வாயன்று 1,537 புதிய கோவிட்-19 தொற்று பதிவாகியுள்ளன. தேசிய தலைநகரத்தில் நேர்மறை விகிதம் 26.54 சதவீதமாக உள்ளது. டெல்லியின் கோவிட்-19 பாதிப்பு 20,25,781 ஆக உள்ளது. கொரோனா வைரஸின் விளைவாக ஐந்து இறப்புகளுடன் சேர்த்து இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 26,572 ஆக உள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு நேர்மறை விகிதம் செவ்வாய்க்கிழமை 3.62 சதவீதத்தில் இருந்து இன்று 4.39 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் வாராந்திர நேர்மறை விகிதம் நேற்று 5.04 இலிருந்து இன்று 5.14 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட மொத்த கொரோனா சோதனைகள் 92.46 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 2,40,014 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை மொத்தம் 220.66 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.