ஆகஸ்டு,13-
ஒன்றுபட்ட ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி .. ஹெலிகாப்டர் விபத்தில் இவர் மரணம் அடைந்த நிலையில் அவரது மகன் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டிட, ஒய் .எஸ்.ஆர்.காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கி ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையானஒய்.எஸ். ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா. எனும் கட்சியைஅண்மையில் ஆரம்பித்து நடத்திவருகிறார்.பி.ஆர்.எஸ்.கட்சியின் தலைவர்சந்திரசேகர ராவ் முதலமைச்சராக உள்ளதெலுங்கானா மாநிலத்தை தளமாககொண்டு இந்த கட்சி செயல்பட்டுவருகிறது. ஆந்திர அரசியலில் ஷர்மிளா மூக்கை நுழைப்பது இல்லை.
இவரது கட்சி போணியாகததால் , காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளார். இணைப்பு தேதியை முடிவு செய்வதற்காகடெல்லி சென்றஷர்மிளா,காங்கிரஸ்பொதுச்செயலாளர்கே.சி.வேணுகோபாலை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.
காங்கிரசில் இணைய ஷர்மிளா இருநிபந்தனைகளை விதித்தார். தனதுஅண்ணன் முதலமைச்சராக இருக்கும்ஆந்திராவில் காங்கிரசுக்காக பிரச்சாரம்செய்ய மாட்டேன் என்பது ஒருநிபந்தனை.கம்மம் மாவட்டம் பெலருசட்டமன்ற தொகுதியில் போட்டியிட தனக்குவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுஇரண்டாவது நிபந்தனை.
இரு கோரிக்கைகளையும் காங்கிரஸ்மேலிடம் ஏற்றுக்கொண்டது.இதனைதொடர்ந்து விரைவிலேயே,தனது கட்சியைஅவர் காங்கிரசில் இணைக்க உள்ளார்.
வரும் 18 ஆம் தேதி இணைப்பு விழாநடைபெறலாம் என தெரிகிறது.அதற்குமுன்னதாக ஷர்மிளா டெல்லி சென்று ,அகில இந்திய காங்கிரஸ் தலைவர்மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியங்காஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாசட்டபேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ,ஷர்மிளா வருகை காங்கிரசுக்குபுதிய பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது.
000
ஆனால் பாஜகவும்,பி.ஆர்.எஸ்.கட்சியும்‘காங்கிரசில் மேலும் ஒரு முதல்வர்வேட்பாளர் உதயம்’ என கிண்டல்அடிக்கின்றனர்.