முதலமைச்சரை வாழ்த்தி நடுக்கடலில் பேனர்.

ஆகஸ்டு,04-

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் ரங்கசாமி பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வெகு விமர்சிகையாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டும் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். 10 நாட்களுக்கு முன்பே ரங்கசாமியை வாழ்த்தி புதுச்சேரி முழுவதும் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டன.

பல்வேறு நடிகர்கள் தோற்றத்திலும் காமராஜர் மற்றும் மன்னர்கள் வேடத்திலும் பேனர் வைத்து, மக்களை கிறுகிறுக்க வைத்துள்ளனர். அவர் பைக், ஓட்டி வருவது போன்றும் ரங்கசாமி செய்த சாதனைகளை பட்டியலிட்டும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி அவரது தொண்டர்கள் நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர். இதனை புதுவை கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

அதிகாரம் இருந்தால் எதை வேண்டுமானாலம் செய்யலாம், எது வேண்டுமானாலும் நடக்கும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *