June 10, 23
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்ட இந்தக்குழு கூட்டம் 3வது முறையாக நடைபெறவுள்ளது.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்தும், வருவாய் அதிகரிக்கவும், மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனைகளை வழங்கவும் இந்த திட்டக்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து 3வது முறையாக இந்தக் கூட்டம் கூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. திட்டக்குழுவின் தலைவர் என்கிற முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்பர். இதில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக மின்கட்டன உயர்வு, மின்சார பற்றாக்குறை, போக்குவரத்து தனியார் மயம் போன்ற அரசின் நடவடிக்கைகளால் அரசு மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் இருந்து வருவதால், இதுகுறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.