ஜெயப்பிரதா என்றதும், 80 ‘கிட்ஸ்’களுக்கு நினைவுக்கு வரும் படம் ‘நினைத்தாலே இனிக்கும்’
இப்போதும் , எப்போதும் இனிக்கும்.
‘அதிலும், ‘ஆனந்த தாண்டவமோ’ பாடலும், ஜெயப்பிரதாவின் ஆட்டமும் ,–அது ‘வேற லெவல்’.
அவரது, நிஜப்பெயர் லலிதா ராணி .
ஆந்திராவின் ராஜமுந்திரியில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கிருஷ்ணா ராவ் தெலுங்கு திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர்.சிறு வயதிலிருந்தே நாட்டியத்திலும், இசையிலும் கவனம் செலுத்திய ஜெயபிரதா, இரண்டிலும் கரை தொட்டவர்.
பள்ளி ஆண்டு விழாவில் ஜெயப்பிரதா ஆடிய நடனம் , அவரது வாழ்க்கையில் திருப்பத்தை உருவாக்கியது.
அந்த விழாவுக்கு வந்திருந்த திரைப்பட இயக்குனர் ஒருவர், அவரது நடனத்தில் மனதை பறி கொடுத்தார்அவர்.
அப்போது – ஆண்டு 1974 – பூமி கோசம் எனும் தெலுங்கு சினிமாவை டைரக்டு செய்து கொண்டிருந்தார்.
அந்த படத்தில், நடனமாட ஜெயப்பிரதாவுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆரம்பத்தில் தயங்கினார், ஜெயப்பிரதா.
பெற்றோர் ஊக்கம் அளித்தார்கள். ‘ஓகே’ சொன்னார், ஜெயப்பிரதா.
அது சில நிமிடங்கள் மட்டுமே இடம் பெற்ற நடனம்.
அந்த நடன காட்சிக்கு ஜெயப்பிரதாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பத்தே பத்து ரூபாய்.
பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
கே. பாலசந்தர் இயக்கிய மன்மத லீலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.
ஐந்தாறு படங்களில் நடித்த பின்னர், அவரது ஊதியம் லட்சங்களை தொட்டது.நடிப்பு மட்டுமல்லாமல், அரசியலிலும் கால் பதித்தார்.
இதற்கு முன்பாக, தெலுங்கு தேசம், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளில் இருந்த ஜெயப்பிரதா,இப்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்.
—