உத்தரபிரதேச மாநிலத்தில் பிரபல தாதாவும், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் 5 முறை எம்.பி்.யாக இருந்தவருமான அட்டீக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அவரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்போடு அழைத்து வந்தனர். அப்போது அட்டீஷ் அகமது ஊடகத்தினரிடம் பேட்டி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் 3 பேர் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். ரத்தவெள்ளத்தில் சாய்ந்த அகமது உயிர் அங்கேயே பிரிந்தது. இந்த தாக்குதலின் போது அகமதுவுடன் இருந்த அவருடைய சகோதர ரும் பலியானார்.
அட்டீக் அகமது கொல்லப்பட்ட போது அவருக்கு பாதுகாப்பாக இருந்த 17 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டு உள்ளார். மூன்று பேர் கொண்ட குழு அமைத்து இரட்டைக் கொலை குறித்து விசாரிக்கவும் அவர் ஆணை பிறப்பித்து இருக்கிறார்.
அட்டீஷ் அகமதுவின் மகனும் அவருடைய கூட்டாளியும் இரு தினங்களுக்கு முன்பு போலீஸ் என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் அட்டீஸ் அகமது கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *