ஜனவரி-28,
“பல பருவ மழைகளை தாண்டி முல்லைப் பெரியார் அணை நிலைத்து நிற்கும். அந்த அணையைக் கட்டிய பொறியாளர்களுக்கு நன்றித் தெரிவிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணியை மேற்பார்வைக் குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது மேற்கண்ட கருத்தை பதிவு செய்த நீதிபதிகள், அணை குறித்த அச்ச உணர்வு காமிக்ஸ் கதைகளில் வருவதை போல் உள்ளது என்று தெரிவித்தனர்.