ஏப்ரல்.23
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில், 12,087 மூட்டை பருத்தி ரூ.2.74 கோடிக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1,216 விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த ஏலத்தில், வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8,527க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.6,600க்கும் சராசரி விலை ரூ.7,650க்கும் விற்பனையானது. மொத்தமாக 12,087 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 3649.61 குவிண்டால் அளவிலான பருத்தியானது ரூ.2,74,41,193 க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் 33வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.