மெக்டொனால்ட்ஸ் தனது அமெரிக்க தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மெக்டொனால்ட்ஸ் கார்பரேட் அலுவலகத்தை அடுத்து 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு முக்கிய காரணம் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்க நடவடிக்கைகளை எடுக்க தலைமை நிறுவனத்தை 3 நாட்கள் மூட மெக்டொனால்ட்ஸ் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தங்களது பணிநீக்கத்தை ஆன்லைன் வாயிலாக அறிவிக்க ஏதுவாக அவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள், கிளையிட் போன்ற சந்திப்பை அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யமாறு அறிவித்தியுள்ளது.
மெக்டெனால்ட்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயிலில், “திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து வேலை செய்யவும், மேலும், ஊழியர்கள் அனைவரும் பணி சம்மந்தமான எந்தவித சந்திப்பும் வைத்திருக்க கூடாது” என்று தெரிவித்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையால் உணவக பணியாளர்கள், டெலிவரி ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து, ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது பற்றி தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.