மே.19
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினத்தையொட்டி, வரும் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்துகிறார்.
ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினம் வரும் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொள்கிறார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்று, வகுப்புவாத சக்திகளை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, தற்போது ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ராகுல்காந்தி தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்ற ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு ராகுல்காந்தி 21-ந்தேதி அன்று காலை வரும்போது, காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் அக்கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.