ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் வீட்டின் மீது முதலீட்டாளர்கள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தினார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம்
நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. இந்த ஊரில் வசிக்கும் ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் யோகானந்தம் வீட்டின் மீது நேற்றிரவு முதலீட்டாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
நெமிலியில் ஒரு ஆண்டுக்கு முன்பு ஆருத்ரா நிதி நிறுவன கிளை அலுவலகம் துவக்கப்பட்து. இதில் ரூபாய் ஒரு லட்சம் கட்டினால் மாதம் 30 ஆயிரம் வரை வட்டி தரப்படும் என்று அறிவித்தார்கள். இதனை நம்ப நெமிலி சுற்றுவட்டார மக்கள் 300 பேர் ரூ 200 கோடி அளவில் முதலீடு செய்ததனர்.
ஆனால் 6 மாதத்திற்கு முன்பு மோசடி செய்ததாக கூறி ஆருத்ரா நிறுவனம் மூடி சீல்வைக்கப்பட்டு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நெமிலி கிளை ஏஜென்ட் யோகானந்தம் வீட்டின் மீது சுமார் 100 பேர் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இதில் கதவு கண்ணாடி, மோட்டார் சைக்கிள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டது.
மேலும் அவரின் சகோதரர் சதிஷ் குமார் என்பவரை மரத்தில் கட்டிப்போட்டனர்.
தகவலறிந்த அரக்கோணம் கோட்ட காவல் துணை கண்கானிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் சநனபுரம் கிராமத்திற்கு வந்து , தாக்குதல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதனால் அமைதி அடைந்த கிராம மக்கள் சதிஷ் குமாரை விடுவித்தனர்.
மரத்தில் கட்டி வைத்து அடித்ததால் நெமிலி சுற்றுவட்டாரத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு நிலவியது.