ஆகஸ்டு,08-
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள மலைநகரம், லவாசா சிட்டி.
எழில் மிகுந்த இந்த நகரின் அழகை ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.. 2010-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த நகரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனம் ஒன்று காண்டிராக்ட் பெற்றுள்ளது.
இங்கு பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவ , அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தச் சிலையை டிசம்பர் மாதத்துக்குள் உருவாக்கி, திறந்துவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குஜராத்தில், சர்தார் வல்லபபாய்படேலுக்கு மிகப்பெரிய சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இது 182 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.தற்போது பிரதமர் மோடிக்கு அமைக்கப்படும் சிலை 200 மீட்டர் உயரத்தில் இருக்கும்.
சிலை அமைக்கப்படும் வளாகத்தில் நாட்டின் பாரம்பரியத்தை சித்தரிக்கும் அருங்காட்சியகம்,கண்காட்சி கூடம் ஆகியவையும் இடம்பெறும். கண்காட்சி அரங்கில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் திரையிடவும் ஆலோசித்து வருகிறார்கள்.
’இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதற்காக பிரதமர் மோடி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.அவரிடமிருந்து ஒரு தொலைநோக்கு பார்வையை நமது நாடுபெற்றுள்ளது. இந்த சிலை நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் அமையும்’’ என சிலையை அமைக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிலை திறப்பு விழாவுக்கு இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி அரேபியா, அமெரிக்க நாட்டுத் தூதர்களை அழைக்கவும் தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
000