மோடியும் சோனியாவும் போட்டிப் போட்டு ஆலோசனை, கட்சிகளுக்கு வலை.

மக்களவை  தேர்தல் அடுத்த ஆண்டு  ஏப்ரல் அல்லது மே மாதத்தில்  நடைபெற உள்ள நிலையில்,பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் பாட்னாவில்  ஏற்கனவே  முதல் கட்ட  ஆலோசனையை முடித்துள்ளன. அடுத்த கூட்டம் பெங்களூருவில்  17- ஆம் தேதி நடைபெற உள்ளது. பாட்னா கூட்டத்தில் கலந்து கொள்ளாத சோனியா காந்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் கூடத்தில பங்கேற்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

எதிர்க்கட்சிகள்  ஆலோசனை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய பாஜகவும் வியூகம் வகுத்து வருகிறது. 1998 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிதும் பெரிதுமாக 20 கட்சிகள் அங்கம் வகித்தன. நாளாவட்டத்தில் தெலுங்கு தேசம், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம்,அகாலிதளம் போன்ற பெரிய கட்சிகளும், சில சின்ன கட்சிகளும் , பாஜக அணியில் இருந்து வெளியேறி விட்டன.

இந்த முறை தங்கள் அணியில் புதிய கட்சிகளை சேர்க்க முடிவு செய்துள்ள பாஜக முதல் கட்டமாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 18 ஆம் தேதி டெல்லியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு, டெல்லி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி பாஜக தலைமையுடன் நெருக்கமாக உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு,அழைப்பு இல்லை.

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக கூட்டணியில் பெரிய கட்சிகள் இல்லை. இதனால் பெரிய கட்சிகளை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு , முதல்கட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனாவில் இருந்து ஏக்நாத்  ஷிண்டே, தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் ஆகியோரை வெளியே கொண்டு வந்து, பாஜக தமது கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. அந்த அணிகளின் தலைவர்களான ஏக்நாத், அஜித்பவார் டெல்லி கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பீகார் சட்டசபை தேர்தலின் போது பிரிந்து சென்ற லோக்ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வானுக்கும் அழைப்பு அனுப்பி உள்ளது ,பாஜக மேலிடம். தேவகவுடாவின் மதச்சாரபற்ற ஜனதா தளம் , தெலுங்கு தேசம், அகாலிதளம் ஆகிய கட்சிகளுடனும் பேசியுள்ளனர். அவர்கள் டெல்லி கூட்டத்தில் கலந்து கொள்வார்களா? என்பது ஓரிரு தினங்களில் தெரிந்து விடும்.

இந்தப் பக்கம் காங்கிரசும அந்தப் பக்கம் பாஜகவும் வரிந்து கட்டிக்கொண்டு கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையத் தொடங்கி உள்ளன.

ஆனால் இந்த இரண்டுப் பக்கமும் சாயாமல் ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அகாளிதளம் ஆகிய கட்சிகளும் உள்ளது குறிப்பிடத் தக்கது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *