மோடியை எதிர்த்துப் போட்டியிட பிரியங்கா திட்டம்.

போட்டி?

—-

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, மழைக்குகூட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பக்கம்ஒதுங்காதவர்.அரசியல் குறித்து அவர்பேசியதில்லை.ஆனால் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, அரசியல் பற்றி வதேராவை  பக்கம் பக்கமாக பேச வைத்துவிட்டார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்டநம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது பேசியஸ்மிரிதி ராணி‘’பிரியங்கா கணவர் வதேராவுக்கும், தொழில் அதிபர் அதானிக்கும் வர்த்தக ரீதியாக தொடர்புஉள்ளது’’ என கொளுத்திபோட்டதோடு, வதேராவும், அதானியும் சேர்ந்து இருக்கும் போட்டோவையும்காட்டினார்.

இதனால் வதேரா கொந்தளித்துள்ளார்.’நான் உண்டு..என் தொழில் உண்டு என இருக்கிறேன்.. அரசியல் வாசனை இல்லாத என்னைப்பற்றி எதுக்காக பார்லிமென்டில் விவாதம். எனக்கும்,அதானிக்கும் சம்மந்தமே கிடையாதுஎன்று ஆதங்கப்பட்டார்.

‘’ அதானிக்கும், எனக்கும் தொடர்பு உள்ளதாக நிரூபிக்கமுடியுமா? என ஸ்மிரிதி ராணிக்கு சவாலும் விடுத்துள்ளார், தேரா.

அடுத்த கட்டத்துக்கும் சென்று விட்டார்.

‘’இந்த தேர்தலில் பாஜக வீழ்த்தப்படவேண்டும்.எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, தங்கள்கூட்டணிக்கு வைத்துள்ள  ’இந்தியா என்ற டைட்டில்அருமையான பெயர்.நாட்டை சீரழித்த பாஜகவைதேர்தலில் வீழ்த்த வேண்டும்.இந்தியா கூட்டணி அதனைசெய்து முடிக்கும்.நாட்டில் மீண்டும் ஜனநாயகம் தளிர்க்கும்என படபடத்தார்.

 

‘’நாடாளுமன்றத்துக்கு செல்ல பிரியங்காவுக்கு அனைத்துதகுதிகளும் உள்ளன.அவருக்கு தேர்தலில் போட்டியிடகாங்கிரஸ் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வதேராகூறினார்.

இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

பிரியங்கா தேர்தலில் நிற்க அவரது கணவர் பச்சைக்கொடிகாட்டியுள்ளதால், அவரை பிரதமர் மோடிக்கு எதிராகவாரணாசி தொகுதியில் நிறுத்த பல்வேறு எதிர்க்கட்சிகள்வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.

மோடியை எதிர்த்து பிரியங்கா நிற்க வேண்டும். நிச்சயம்பிரியங்கா வெல்வார். வாரணாசி மக்கள் பிரியங்காவைவிரும்புகிறார்கள்’’ என சிவசேனா ( உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான ஹரிஷ்ராவத்தும் இதே கருத்தை வழிமொழிந்துள்ளார்.

கடந்த 2019 தேர்தலிலேயே வாரணாசியில் மோடியைஎதிர்த்து பிரியங்கா நிற்பதாக இருந்தது.ஆனால் கடைசிநேரத்தில் அஜய் ராய் என்பவரை வேட்பாளரக அறிவித்தது, காங்கிரஸ்.இந்த முறை பிரியங்கா, வாரணாசியில்போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல்நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடி 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 ஓட்டுகள் வித்தியாசத்தில்அமோக வெற்றி பெற்றார்.

சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி சுமார் 1 லட்சத்து 95 ஆயிரம் வாக்குகளும், காங்கிரசின் அஜய் ராய் சுமார் 1 லட்சத்து 52 ஆயிரம் வாக்குகளும் வாங்கினர்.

மோடியை எதிர்த்து பிரியங்கா களம் இறங்கும் பட்சத்தில் , முடிவுகளை கணிக்க முடியாது என்பது அரசியல்நிபுணர்கள் கணிப்பாகும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *