மோடி அரசு மிரட்டுகிறது… காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் கடுமையாக கண்டனம்.

அமலாக்கத் துறை போன்வற்றைக் கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பார்க்கிறது மோடி அரசு என்று இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக கண்டித்து உள்ளார்.

அவரின் அறிக்கை வருமாறு..

*தமிழக மின்சாரத்துறை அமைச்சர் திரு.வி.செந்தில் பாலாஜியின் அலுவலக சோதனையில் அமலாக்கத்துறையை அப்பட்டமாக பயன்படுத்தியதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது*

*துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்றவற்றில் மோடி அரசின் வெட்கக்கேடான முயற்சிகள் இவை. அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய மோசமான துஷ்பிரயோகம் மோடி அரசாங்கத்தின் அடையாளமாகும்*

*இந்த உத்திகள் எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதில் வெற்றியடையாது. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரும் உறுதியை மட்டுமே அவை வலுப்படுத்துகின்றன*

இவ்வாறு கார்கே தெரிவித்து உள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி உட்பட மற்றக் கட்சித்தலைவர்களும் தங்கள் கண்டனத்தை அமலாக்கத்துறைக்கு எதிராக பதிவு செய்திருக்கிறார்கள்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *