நெய்வேலி நிலக்கரி விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை இன்று நேரில் சந்தித்திருக்கிறார். இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு, தமிழக பாஜக சார்பில் கோரிக்கை மனு அளித்தோம். மாண்புமிகு அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
2023-04-05