அசத்தப்போவது யாரு புகழ் சின்னத்திரை காமெடி நடிகரை பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து இரு காலை உடைத்த மனைவி உட்பட 6 பேர் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
மதுரையில் தபால் தந்தி நகரில் வசிக்கும் சின்னத்திரை நடிகர் வெங்கடேசன் தான் தாக்குதலுக்கு ஆளானவர். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். மதுரையில் விளம்பர ஏஜென்சி வைத்து விளம்பரங்கள் எடுப்பது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்றவை இவரின் மற்ற வேலைகளாகும். இது மட்டுமன்றி சமூக வலைதளத்தில் ரீல்ஸ், அரசியல் கருத்து, பாடல் பாடி வீடியோ பதிவிடுது போன்றவற்றையும் செய்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு வந்தார்.
வெங்கடேசன் இதோடு நிறுத்திக் கொள்ளாமல் பாரதீய ஜனதா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார். இதற்காக பாஜக நிர்வாகிகள் சின்னத்திரை நடிகரை நேரில் சென்று மிரட்டியதும் உண்டு.
இவை மட்டுமல்ல காமெடி நடிகர் வெங்கடேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவும் இருந்துள்ளது. இது மனைவி பானுமதிக்கு தெரியவர வெங்கேடசைக் கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அவ்வபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் ,மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து அவருக்கு நோட்டீசை வழங்கினார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தாலும் இருவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்தனர்.
கணவர் தன்னுடன் மட்டுமே வாழவேண்டுமென என முடிவு செய்த பானுமதி தனது வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரியும் மோகன் என்பரிடம் வெங்கடேஷ் காலை உடைத்து வீட்டில் போட திட்டம் தீட்டினார். இதனைஅடுத்து மோகன அறிமுகம் செய்து வைத்த ராஜ்குமார் காலை உடைக்க ஒரு லட்சம் ரூபாய் கேட்கவே அந்த முடிவை பானுமதி கைவிட்டு விட்டார்.
இருந்தாலும் வெங்கடேசன் மீது வெறுப்பில் இருந்த பானுமதி பாஜகவில் இருக்கும் உறவினரான வைரமுத்துவை அணுகி அவரிடம் கணவர் பற்றி தெரிவித்து உள்ளர்.
ஏற்கனவே மோடி, அமித் ஷாவை விமர்சித்துது பதிவு போட்டதால் வெங்கடேஷ் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். பிறகு அவர் டிரைவர் மோகனுடன் திட்டம் போட்டு வெங்கடேஷை திருப்பாலை செல்லும் வழியில் உள்ள நாகனாகுளம் கண்மாய் பகுதிக்கு கடந்த 15 ஆம் தேதி அழைத்து வரச் சொல்லி இருக்கிறார். அங்கு மறைந்திருந்த பாஜகவை சேர்ந்த மலைச்சாமி, அனந்தராஜ், வைரமுத்து ஆகியோர் வெங்கடசேனை கட்டையால் அடித்து இரண்டு கால்களையும் உடைத்துவிட்டனர்.
வெங்கடேஷ் அடி தாங்க முடியாமல் போட்ட அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெங்கடேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வெங்கடேஷ் தல்லாகுளம் போலீசில் அளித்தப் புகார் அடிப்படையில் போலீசார் வெங்கடேஷ் மனைவி பானுமதி(48), ராஜ்குமார்(37), மோகன்(40) வைரமுத்து(38) மலை சாமி(35) ஆனந்தராஜ் (37) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். மேலும் தலை மறைவாக இருக்கும் துளசி என்பவரை தேடி வருகின்றனர்.
சிறைக்கு அழைத்துச் செல்லும் போதும் வைரமுத்து, மலைசாமி, ஆனந்த் ராஜ் ஆகியோர் காவி துண்டை கழுத்தில் அணிந்தபடி பாரத் மாதாகி ஜெய் என்ற முழக்கத்துடன் காவல்துறை வாகனத்தில் ஏறி சென்றது குறிப்பிடத்தக்கது.
000