யூ டியூபில் பிரபலமாக விளங்கும் டிடிஎஃப் வாசன் என்பவர் சென்னையில் அதிவேகமா காரை ஓட்டி ஆட்டோ மீது மோதி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்,
மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகவும், சாகசம் செய்வது போன்றும் ஒட்டி அதை வீடியோ படமாக எடுத்து அதனை தனது யூ ட்யூபில் பதிவேறுவது வாசனின் செயலாகும். இதன் சமூக வலைதளங்களில் இவரை ஏரளாமானவர்கள் பின்தொடர்கின்றனர். சாலை விதிகளை மீறி அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய புகார்களின் பேரில் இவர் பல்வேறு வழக்குகளிலும் சிக்கியுள்ளார்.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாகவும், நம்பர் பிளேட் இல்லாமல் காரை இயக்கியதாகவும் என பல்வேறு சாலை விதிகளை மீறியதாக டி.டி.எப் வாசன் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது வழக்கு உள்ளது
எப்படியோ பிரபலமடைந்த டி.டி.எப் வாசன், சமீபத்தில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.
இந்த நிலையில். சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து அமைந்தகரை செல்லும் நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக இன்று காலை ஆறு மணிளவில் வாசன் தமது நண்பர்கள் காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் வலது புறம் மேம்பால சுவற்றில் மோதி பின்னர் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டது. இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டதில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
காயம் அடைந்த நபருக்கு உதவி செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்ற எந்த உதவிகளையும் வாசன் செய்யவில்லை. அவர்கள் அனைவரும் காரை அப்படியே விட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போலிசார் வழக்குப் பதவு செய்து வாசனை தேடி வருகின்றனர். அனைவரும் குடி போதையில் இருந்தார்களா என்பதும் ஆராயப்பட்டு வருகிறது.
000