தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் ரகுவரன்,
ஹீரோ, வில்லன், குணசித்திரம் என தனக்கு வாய்த்த அனைத்து பாத்திரங்களை கச்சிதமாக செய்தவர்.
பாட்ஷாவும், பூவிழி வாசலிலே படமும் அவரது மாஸ்டர் பீஸ் படங்கள்.நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவரிடமிருந்து பிரிந்தார்.போதை பழக்கம் உண்டு.
2008 ஆம் ஆண்டு காலமானார்.
ரகுவரனின் வாழ்க்கையை மலையாள சினிமாவின் புகைப்பட கலைஞர் ஹாசிப் அபிதா ஹகீம் ,ஆவணப்படமாக உருவாக்கி வருகிறார்.இதற்கு ‘ரகுவரன்: காலத்தை வென்ற கலைஞன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். ரகுவரனின் சாயலை கொண்ட அதுல்ஷரே,ரகுவரனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில், ரோகிணி, எழுத்தாளர் இந்துமதி, நிழல்கள் ரவி, ரகுவரனின் அம்மா, மகன் ரிஷி ஆகியோர் ரகுவரனின்
குணம், மனம் குறித்து பேசி இருக்கிறார்கள்.
இந்த ஆவண படத்தில் பாதி, ரகுவரன் நேரடியாக தோன்றும் வீடியோ காட்சிகள் இடம்பெறுகிறது.
‘சூப்பர்ஸ்டார்’ரஜினி, ரகுவரன் குறித்து இந்த ஆவணப்படத்தில் பேச உள்ளார். அவரது, பேட்டிக்காக படக்குழு காத்திருக்கிறது. ரஜினி பேட்டி கிடைத்ததும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
—