ஜனஙரி-06,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில் நீண்ட நாட்கள் தலைவராக இருந்தவர் சத்யநாராயணன். ரஜினி, அவரை சத்தி என்றுதான் செல்லமாக அழைப்பார்.
உடல்நலம் சரி இல்லாததால் அவரை பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி, பொறுப்பில் இருந்து விடுவித்து விட்டார்.
சத்திக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது, நாள் ஒன்றுக்கு ரூ .10 ஆயிரம் செலவாகிறது.
தகவல் அறிந்த ரஜினி துடித்து போனார்.
முழு செலவையும் தானே ஏற்பதாக சொல்லி விட்டார்.
மருத்துவமனையின் வங்கி கணக்கை கேட்டு வாங்கி, இதுவரை ஆன செலவுகளுக்கான மொத்த பணத்தையும் அனுப்பி விட்டார், ரஜினி.
–