ரஜினிக்கு கலாநிதி கொடுத்த காசோலை.

செப்டம்பர்,01-

ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இதனால் அந்தப் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரஜினி மீண்டும் கால்ஷீட் கொடுத்தார்.அந்தப்படம் தான்,‘ஜெயிலர்’.நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்தப்படம் 525 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெயிலர் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். ரஜினியை பாராட்டி, வாழ்த்து தெரிவித்த கலாநிதி மாறன் , அவரிடம் காசோலை ஒன்றையும் வழங்கினார். ரஜினி-கலாநிதி மாறன் சந்தித்த போட்டோக்கள்,சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து லால் சலாம் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார்.அதில் தனது போர்ஷனை முடித்து கொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.இது, ரஜினியின் 170-வது படம். இந்தப்படத்தை அமோக வெற்றி பெற்ற ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கவுள்ளார்.

படப்பிடிப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இப்போது படத்தில் நடிக்கும் நடிகர்- நடிகைகள் தேர்வை இயக்குனர் ஞானவேல் நடத்தி வருகிறார்.இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், மஞ்சு

வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் நானி இதில் நடிப்பதாக இருந்தது.வில்லன் வேடம் என்பதால் அவர் மறுத்து விட்டார்.. அவருக்குப் பதிலாக சர்வானந்த் நடிக்க உள்ளார். அந்தப்படம் குறித்து மேலும் சில செய்திகள் இப்போது வெளியாகியுள்ளன.தெலுங்கு நடிகர் ராணாவும் இதில் நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை கதைக்களமாக கொண்ட இந்த படத்துக்கு ‘வேட்டையன்’ என்று பெயர் வைக்கப் பட்டுள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்களில் தகவல் .

ஜெயிலரை தொடர்ந்து இதிலும் ‘வேட்டையாடுங்க.விளையாடுங்க’ தலைவரே!.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *