ரஜினியா? சிரஞ்சிவியா? ஆந்திராவில் நேருக்கு நேர் மோதல்.

ஜுலை, 31-

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர்  நடித்து 2015-ம் ஆண்டு வெளியான படம், ‘வேதாளம்’.

மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம் தெலுங்கில் ‘போலா சங்கர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா ஜோடியாக நடித்துள்ளார்.

சிரஞ்சீவி தங்கையாக  கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.. மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இந்தப்படம் .அடுத்த மாதம் 11-ம் தேதி வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த படம் உருவாகியுள்ளது.

ஆகஸ்டு 11-ஆம் தேதி சிரஞ்சீவி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் அதற்கு முதல் நாள்  10- ஆம் தேதி ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகிறது.

தெலுங்கிலும் ரஜினிக்கு தனி மார்க்கெட் உள்ளதால் ,ஜெயிலர் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானா  மாநிலங்களிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது

ரஜினியும், சிரஞ்சீவியும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், ஒரே நேரத்தில் தங்கள் படங்கள்  ரிலீஸ் ஆவதை  அவர்களால் தவிர்க்க இயலவில்லை.

இந்நிலையில் ‘போலா சங்கர்’ படத்துக்காக, இதுவரை இல்லாத அளவுக்கு 126 அடி உயரத்தில் சிரஞ்சீவியின் கட் அவுட்  ஐதராபாத்தில்  வைக்கப்பட்டுள்ளது. விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூர்யாபேட்டில் உள்ள உணவகத்தில்  வைக்கப்பட்டுள்ள இந்த கட் அவுட்டை பொதுமக்கள் பிரமிப்புடன் பார்த்து செல்கின்றனர்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *