அண்ணாத்த படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.அடுத்த மாதம் வெளியாகும் இந்த படத்தில் இடம் பெறும் ‘காவலா’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
வெளியான சில நாட்களில் இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள், இந்தப்பாடலை யூடியூப்பில் பார்த்துள்ளனர். ஜெயிலர் படத்தை முடித்த கையோடு ஓய்வு ஏதும் எடுக்காமல் ’லால் சலாம்’ படத்தின் ஷுட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும்,இந்தப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் ரஜினி நடிக்கிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் லால் சலாம் படத்தை. லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் ரஜினி நடிக்கிறார். பாட்ஷா மாதிரியான கேரக்டர் என சொல்லப்படுகிறது.ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள், முழு மூச்சாக எடுக்கப்பட்டன. புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரஜினி நிறைவு செய்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி அவரை வழி அனுப்பி வைத்தனர்.
ரஜினி தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. லால் சலாம் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் அவரது 170 படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது.இதனை ஞானவேல் டைரக்டு செய்கிறார்.
000