கே.பாலசந்தர் தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த படம் ‘முத்து’.
இது குறித்து இரு முக்கிய தகவல்கள்.
முத்து படத்தில் நடிப்பதற்கு முன்பு , ‘சிகப்பு
ரோஜாக்கள்’ படத்தை தயாரித்த கே.ஆர்.ஜி. க்குத்தான் ரஜினி கால்ஷீட் கொடுத்திருந்தார்.
அந்த நேரத்தில் கே.பாலசந்தர் இயக்கி, தயாரித்த’டூயட்’ படம்
தோல்வி அடைந்து , பாலச்சந்தருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தது. ரஜினி கால்ஷீட் கொடுத்தால் மட்டுமே, மீள முடியும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தார்.
இதனை கேள்விப்பட்ட ரஜினி, கே.ஆர்.ஜி.க்கு அளித்த தேதிகளை கேன்சல் செய்து விட்டு , குரு நாதர் படத்துக்கு அதனை மாற்றிக்கொடுத்தார்.
ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர்களை உருவாக்கிய முத்து படத்தில் மீனா , ரஜினி ஜோடியாக நடித்திருப்பார்.அந்த வேடத்தில் நடிக்க ரஜினி, முதலில் யாருக்கு அழைப்பு விடுத்தார், தெரியுமா?
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ‘பெப்சி ‘உமாவுக்கு.
முத்து படத்தில் நடிக்க, மீனாவுக்கு முன்னர், இவருக்குதான் அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால், அவர் அதை மறுத்துவிடவே மீனா ஹீரோயின் ஆனார்.
இன்னொரு முறையும் ரஜினி தன்னுடன் நடிக்குமாறு, பெப்சி உமாவை அழைத்துள்ளார். அதற்கும் அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
பல படங்களில் நடிக்க உமாவைத்தேடி வாய்ப்புகள் வந்தன. ஆனால் திரைப்படங்களில், நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என அவர் கூறி விட்டார்.
—