டிசம்பர்-01.
ரஜினிகாந்த் படங்களில் ‘ஸ்டண்ட்’ காட்சிகளுக்கு நிகராக ‘பஞ்ச் டயலாக்’ தவிர்க்க முடியாத அம்சமாக உள்ளது.
பல வசனங்கள் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருக்கும். படத்தின் கதை களத்துக்கு சில பொருத்தமாக இருக்கும்.
‘பாட் ஷா’படத்தில் கதை களத்துக்கு அவசியமான ஒரு வசனம் உண்டு,
அது –
‘’நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்’ என்பது, அந்த ‘டயலாக்;
வில்லன் ரகுவரனை பார்த்து, இந்த வசனத்தை ரஜினி பேசுவார். இந்த வசனத்தை எழுதியவர் –பிரபல எழுத்தாளர் பாலகுமாரன்..ரஜினிக்கு இந்த ‘டயலாக்’மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த வசனம் எழுதிய பாலகுமாரனை அவர் சிலாகித்ததாக சொல்வார்கள்.
இந்த நிலையில், இன்று ஆங்கில புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லிய ரஜினிகாந்த், பாலகுமாரனின், ‘பாட்ஷா ‘ வசனத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
இது, ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி :
‘ நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025.’ என ரஜினி வாழ்த்தியுள்ளார்.
இந்த டயலாக்கை ‘தலைவர் ஏன் இப்போது கூறி இருக்கிறார் என அவரது ரசிகர்கள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
—