ரஜினி படத்தை வாழ்த்தி வரவேற்கும் தனுஷ், காரணம் என்ன என்றால்…

ஆகஸ்டு,08-

ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) வெளியாகிறது.

சூப்பர்ஸ்டார் ரசிகர்களை போன்று , நடிகர் தனுசும்  இந்த படத்தின் கொண்டாட்டத்துக்கு தயாராகி இருக்கிறார். அவர், `வாத்தி’ படத்துக்குப் பிறகு `கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உருவாகும் அவரது 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்ய இருக்கிறார். தனுசும், சேகர் கம்முலாவும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா 2 என பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் தனுஷ் .ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் குறித்து தனுஷ் போட்டுள்ள,ட்விட்டர் பதிவு  வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோ பதிவில், தனுஷ்’’ இது ஜெயிலர் வாரம்’ என குறிப்பிட்டு, சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட தனுஷ், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

என்றாலும்  தனது முன்னாள் மாமனார் ரஜினி மீது அவர் வைத்துள்ள பாசம் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்கு இந்த ட்விட்டர் பதிவே சான்று என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து அந்தப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்க உள்ள படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இந்தபடத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *