‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் இரு மகள்களும், சினிமாவில்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தந்தையின் ஆசியும்,ஆதரவும் இருந்தும், இருவரும் குறைந்த பட்ச வெற்றியைக்கூட எட்டவில்லை.
மூத்தவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டதோடு, சினிமாவில் இயக்குநராக களமிறங்கினார்.
தனுஷை வைத்து’ 3 ‘எனும் படத்தை இயக்கினார். ஓரளவு பெயர் கிடைத்தது. அதன்பின் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார், படம் சரியாக போகவில்லை.
கடைசியாக விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த ‘ லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.லைகா நிறுவனம் தயாரித்த இந்த படமும் வெற்றி அடையவில்லை. சுமாராகவே ஓடியது. தயாரிப்பாளருக்கு பெருத்த இழப்பை கொடுத்தது.
சோர்வு அடையாத ஐஸ்வர்யா ,புதிய ‘ஸ்கிரிப்ட்’ தயாரிக்கும் வேலையில் சில மாதங்களாக ஈடுபட்டார்.
அந்த கதையுடன் நேற்று, திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றார்.புதிய படத்தின் கதையை முருகன் திருவடியில் வைத்து சாமி தரிசனம் செய்தார்.
இப்போதைக்கு ஐஸ்வர்யா , புதிய படம் இயக்குவது மட்டும் உறுதி ஆகியுள்ளது. நட்சத்திரங்கள் , தயாரிப்பாளர் முடிவாகவில்லை.
—