ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த ஒரு கொடுமையும் நடக்கக்கூடாது என்றும் எனது இந்து சகோதர சகோதரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் அவர்களை (முஸ்லிம்கள்) பாதுகாத்து காப்பாற்றுவார்கள் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் ஹவுராவில் ராம நவமி ஊர்வலத்தின் போது பெரும் வன்முறை ஏற்பட்டது. இது மம்தா பானர்ஜிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரும் 6ம் தேதியன்று அனுமன் ஜெயந்தி விழாவின் போது எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரின் கெஜூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: ஏப்ரல் 6ம் தேதி நமது மக்களை விழிப்புடன் வைக்க விரும்புகிறேன். நாங்கள் பஜ்ரங்பாலியை (அனுமன்) மதிக்கிறோம். ஆனால் அவர்கள் கலவரத்திற்கான திட்டங்களை வைத்திருக்கலாம். அனுமதியின்றி பேரணி நடத்துகின்றனர். அவர்கள் வேண்டுமென்றே சிறுபான்மை பகுதிகளுக்குள் நுழைகிறார்கள். சிறுபான்மையினருக்காக பல திட்டங்களை நான் செய்தேன். ஆனால் பா.ஜ.க.விடம் பணம் பெற்று சிலர் அவற்றை அழித்து வருகின்றனர்.
பெற்றெடுக்கவில்லை. இது மாதங்கினி ஹஸ்ரா பிறந்த இடம். எனது சகோதர சகோதரிகளுக்கு பொறுப்பை வழங்க விரும்புகிறேன். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த ஒரு கொடுமையும் நடக்கக்கூடாது. எனது இந்து சகோதர சகோதரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் அவர்களை (முஸ்லிம்கள்) பாதுகாத்து காப்பாற்றுவார்கள். அவர்கள் சிறுபான்மையினர், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.