நெல்லை எக்ஸ்பிரஸ் உப்பட பல ரயில்களில் தென்னக ரயிவே செய்து உள்ள மாற்றம் இரண்டாம் வகுப்புப் பயணகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை விரைவு ரயில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயிலாக திகழ்கிறது.
இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு தூங்கு வசதியுடன் கூடிய S1,S2 வில் தொடங்கி S13 வரை 13 பெட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் 72 படுக்கைகள் உண்டு. திருநெல் வேலியில் இருந்து சென்னைக்கு இந்தப் பெட்டியில் ஒருவருக்கான கட்டணம் ரூ 395 .
அதே நேரத்தில் ஏசி 3- வது வகுப்புப் பெட்டியில் ஒருவருக்கான கட்டணம் ரூ 1040 ஆகும். ஏசி 2- வது வகுப்புப் பெட்டியில் பயணிக்க ஒருவர் ரூ 1460 செலுத்த வேண்டும். ஏசி முதல் வகுப்பு பெட்டி என்றால் டிக்கெட் விலை ரூ 2400 ஆகும்.
நெல்லை,விருதுநகர்,தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் பேர் சென்னையில் வசிக்கின்றனர். நடுத்தர வருமானம் கொண்ட இவர்கள் தூங்கும் வசதி கொண்ட சாதாரணப் பெட்டிகளில் ரூ 395 கொடுத்து முன் பதிவு செய்து பயணிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள்.
இவர்களின் வயிற்றில் அடிக்கு வகையில் ரயில்வே நிர்வாகம் S1 முதல் S13 வரை இருந்த இரண்டாம் வகுப்புப் பெட்டிகளின் எண்ணிக்கையை எட்டுப் பெட்டிகளாக குறைத்துவிட்டது. குறைக்கப்பட்ட ஐந்து பெட்டிகளையும் குளிர்சாதன வசதிக் கொண்டப் பெட்டிகளாக மாற்றி இரு்க்கிறது ரயில்வே நிர்வாகம்.
இதனையடுத்து ஏசி 3 ஆம் வகுப்புப் பெட்டிகளின் எண்ணிக்கை மூன்றில் இருந்து ஆறாக அதிரிக்கப்பட்டு உள்ளது. இது எதானல் என்றால் சாதாரண இரண்டாம் வகுப்புப் ( ஏசி வசதி இல்லாத) பெட்டி என்றால் 72 பயணிகளுக்கும் சேர்த்து 28,440 ரூபாய் வசூலாகும். அதுவே ஏசி 3 ஆம் வகுப்பு பெட்டி என்றால் 74,880 ரூபாய் கிடைக்கும்.
மேலும் நெலலை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி இரண்டாம் வகுப்புப் பெட்டிகளின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து இரண்டாக அதிகரித்து உள்ளது.
இது மட்டுமின்றி இந்த ரயிலில் ஏசி முதல் வகுப்புப் பெட்டி ஒன்றும சேர்க்கப்பட்டு இருக்கிறது.
ரயில்வே நிர்வாகம் சத்தம் போடமால் ஐந்து சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகளை குளிர்சாதன வசதிக் கொண்ட பெட்டிகளாக மாற்றி உள்ளதால் இரண்டாம் வகுப்பு டிக்கெட் கிடைப்பது முன்பை விட இன்னும் கடினமாகிவிட்டது.
முன்பு ரூ 395 கொடுத்து பயணித்தவர்கள் இப்போது குறைந்த பட்சம் ரூ 1040 தந்து டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.
குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்றால் இன்னொரு ரயில் ஒன்றை விட்டு அதில் அனைத்துப் பெட்டிகளையும் குளிர்சாதனப் பெட்டிகளாக இணைத்து இருந்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. இருந்த வசதியைக் குறைத்து இருப்பது அனைவரையும் குமுறச் செய்து உள்ளது.
இது ஏதே நெல்லை விரைவு ரயிலில் மட்டும் செய்யப்பட்டு உள்ள மாற்றம் என்று கருதிவிட வேண்டாம். இன்னும் பல ரயில்களிலும் இதே போன்று இரண்டாம் வகுப்புப் பெட்டிகளை ரயில்வே குறைத்து வருமானத்தைக் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
000