ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மக்கள் , சபரிமலை
ஐயப்பனை தரிசனம் செய்துவருகிறார்கள். அதுபோல் சினிமா நட்சத்திரங்கள் அதிகமானோர்வழிபட்ட தலமும் சபரிமலை தான்.
இவர்களுக்கு வழிகாட்டி, நடிகர் நம்பியார்.
ரஜினிகாந்த் உள்ளிட்டோரை , நம்பியார் சபரிமலைக்கு
அழைத்து சென்றுள்ளார். நம்பியார் சாமி மறைந்து விட்டாலும்,இப்போதும்பல நடிகர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு நடிகர் ஜெயராமுடன் சென்று ஐய்யப்ப சாமியை தரிசனம் செய்தார்.
அவர் , இந்த ஆண்டு தன்னுடைய நண்பர்
கார்த்தியை அழைத்து சென்றிருந்தார். கார்த்தி சபரிமலைக்கு செல்வது இதுவே முதன்முறை ஆகும். அவர் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்டி கன்னிச் சாமியாக சபரிமலைக்கு சென்றார்.
கோயிலுக்கு செல்லும் வழியில் கொச்சி விமான நிலையத்தில்கார்த்தியும், ரவி மோகனும்மலையாள
நடிகர் திலீப்பை சந்தித்து பேசினர்.
—