ரஷ்யாவில் திடீர் கிளச்சி.. மாஸ்கோவைக் கைப்பற்ற 25  ஆயிரம் வீரர்கள் ஆயுதங்களுடன் முன்னேற்றம். புடினுக்கு ஆபத்து.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா நியமித்திருந்த வாக்னர் என்ற தனியார் ராணுவம் இப்போது ரஷ்யா மீதே போர் தொடுத்துள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. உக்ரைன் மீது கடந்த 17 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷ்யா, போதிய வீரர்கள் இல்லாததால் வாக்னர் என்ற தனியார் ராணுவத்தை போரில் பயன்படுத்தியது இப்போது பெரிய பிரச்சினையாகிவிட்டது.

வாக்னர் குழுவின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஷ், ரஷ்ய படைகள் நடத்திய வான் வழித்  தாக்குதலில் தங்கள் படையைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் இறந்து விட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார். இதற்குப் பழி தீர்க்க மாஸ்கோ நகரை கைப்பற்றப் போவதாக அவர் மிரட்டல் விடுத்து இருக்கிறார். உக்ரைன் உடன் போர் செய்வதற்குப் போதிய ஆயுதங்களைத் ரஷ்யா தரவில்லை என்பதும் அவரின் குற்றச்சாட்டாகும். ரஷ்யா ஏற்கனேவே உக்ரைன்  நாட்டிடம் இருந்து கைப்பற்றி  தன்னாட்சி பகுதியாக வைத்திருக்கும்  கிரிமியாவிலிருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்திருக்கும் வாக்னர் வீரர்கள் 25 ஆயிரம் பேர் ராஸ்டவ் என்ற நகரிலுள்ள ராணுவ தலைமையகத்தை கைப்பற்றி உள்ளனர்.

கடைசியாக கிடைத் தகவலின்படி வாக்னர் படைகள், மாஸ்கோவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் முகாமிட்டுள்ளன. இதை எதிர்கொள்ளும் வகையில், மாஸ்கோவில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மாஸ்கோவுககு வரும்  சாலைகள், தடுப்புகள் ஏற்படுத்தி மூடப்பட்டு விட்டன.

அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வாக்னர் குழு முதுகில் குத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்பி உள்ள அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை  செய்துள்ளார்.

உக்ரைன் உடன்  போர் செய்ய போதிய வீரர்கள் இல்லாததால் சிறைக் கைதிகளை விடுவித்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து போரில் ரஷ்யா ஈடுபடுத்தி வருவதும் குறிப்பிடத் தக்கது.

ஆனால உக்ரைனோ, அமெரிக்கா போன்ற நாடுகள் கொடுக்கும் நவீன ஆயுதங்கள்,ஏவுகணைகள் மூலம் சளைக்காமல் சண்டைப் போட்டு வருகிறது.

இந்தச் சூழலில் இப்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சியில் இருந்து ரஷ்யா எப்படி மீளும் என்று தெரியவில்லை.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *