மே.11
ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் சைபீரியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது யூரல் மலைப்பகுதி. இந்த மலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. மளமளவெனப் பரவிய இந்த காட்டுத் தீயால், ரஷ்யாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீக்கு இரையாகி, சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஹேக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன.
மேலும், இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காட்டுத் தீயில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கோடை வெயில் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என இரு நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.