டிச-19.
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்திருப்பது உலகம் முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தடுப்பூசி அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தெவித்து இருக்கிறது.
பல்வேறு நோய்களை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தி உள்ள மருத்துவ அறிவியல் துறைக்கு புற்றுநோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பது பெரும் சவாலக இருந்து வருகிறது. பல் வேறு ஆய்வு நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இதற்கான முயற்சிசியில் தொடர்ந்தது ஈடுபட்டு வந்தாலும் முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் புற்று நோய்க்கு ரஷ்யா நாட்டு மருத்துவ அறிவியல் கழகம் கண்டுபிடித்து உள்ள தடுப்பூசி அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் போது அது முழுமையாக நோயைக் கட்டுப்படுத்துமா என்பது தெரியவரும்.
***