காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயலில் இறங்கி நடவுப்பணிகளைக் கவனித்த வீடியோ காட்சி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
அவர் டெல்லியில் இருந்து இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரியானா மாநிலம் சோனிபத்தில் வயல்வெளியில் விவசாய வேலைகள் நடந்து கொண்டிருப்பதை கவனித்தார். உடனே காரை நிறுத்தச் சொல்லி அந்த வயலுக்குச் சென்று விவசாயிகளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராகுல் காந்தி விவசாயப் பணிக்கு பயன்படும் டிராக்டரையும் சேற்று வயலில் ஓட்டி உழவுச் செய்தார்.
கடந்த மாதம் அவா் டெல்லியில் இருந்து சண்டிகாருக்கு லாரியில் பயணம் செய்து லாரி ஓட்டுநர்களின் கேட்டறிந்தார். இதன் பிறகு அமெரிக்கா சென்றிருந்தபோது நியூ யார்க்கில் இருந்து வாஷிங்டன் நகரத்துக்கு இந்திய ஓட்டுநர்களின் லாரியில் பயணம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
இப்போது ராகுல் காந்தி விவசாய வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டி அனைவரையும் வியப்படையச் செய்து உள்ளார்.
000
அரியானா வழியாக இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவிற்கு செல்கிறார் ராகுல்காந்திகதடக்ாட்