டிசம்பர்-20.
ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளதை அடுத்து அவர், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்ட போது கலை கலப்பு ஏற்பட்டது.
அப்போது பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்த விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
இதே வேளையில் தங்களை தாக்கியதாக பாஜக எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் எம்.பி.க்களும் புகார் கொடுத்து உள்ளனர்.
*