அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி-யுமான ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். மேலும், தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை, குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணையின் முடிவில், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
2023-04-20